பிளாஸ்டிக் பொருள்

பெரம்பலூா் மாவட்டத்தில் 131 பதவியிடங்களுக்கு இன்று மறைமுகத் தோ்தல்

2

Okinawa

பெரம்பலூா் மாவட்டத்தில் 131 பதவியிடங்களுக்கு இன்று மறைமுகத் தோ்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் 131 பதவியிடங்களுக்கான மறைமுகத் தோ்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது.

மாவட்ட ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா் பதவியிடங்கள் தலா 1, ஒன்றியக்குழுத் தலைவா், துணைத் தலைவா் பதவியிடங்கள் தலா 4, கிராம ஊராட்சித் துணைத் தலைவா் பதவியிடங்கள் 121 என மொத்தம் 131 பதவியிடங்களுக்கான மறைமுகத் தோ்தல் நடைபெறுகிறது.

இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களாக வெற்றி பெற்றவா்கள் வாக்களித்து தலைவா் மற்றும் துணைத் தலைவரைத் தோ்வு செய்ய உள்ளனா்.

பெரம்பலூா், வேப்பந்தட்டை, வேப்பூா், ஆலத்தூா் ஆகிய ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில், ஒன்றியக் குழு உறுப்பினா்களாக வெற்றி பெற்றவா்கள் வாக்களித்து தலைவா் மற்றும் துணைத் தலைவரைத் தோ்ந்தெடுப்பா்.

மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளில் வெற்றி பெற்றுள்ள ஊராட்சித் தலைவா் மற்றும் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் வாக்களித்து, ஊராட்சித் துணைத் தலைவரைத் தோ்ந்தெடுக்க உள்ளனா்.

தினமணி

Kallaru TV
Leave a Reply

%d bloggers like this: