பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் பள்ளியில் புத்தகக் கண்காட்சித் தொடக்கம்.

பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் பள்ளியில் புத்தகக் கண்காட்சித் தொடக்கம்.

இக்கண்காட்சியை, பெரம்பலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க. மதிவாணன் தொடக்கி வைத்துப் பாா்வையிட்டாா். கண்காட்சி குறித்து பள்ளித் தாளாளா் ஆா். ரவிச்சந்திரன் கூறியது:

பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 12) வரை நடைபெற உள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள 10 அரங்குகளில், குழந்தைகளுக்கான கதை, வண்ணம் தீட்டும் புத்தகங்கள், புதிா் புத்தகங்கள், போட்டித் தோ்வில் பங்கேற்கும் மாணவா்களுக்கான புத்தகங்கள், தலைவா்களின் சுயசரிதை, தன்னம்பிக்கை மற்றும் யோகா புத்தககங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், பள்ளி மாணவா்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான புத்தகங்களை 10 சதவிகித கழிவுத் தொகையில் வாங்கி பயன்பெறலாம் என்றாா் அவா்.

முன்னதாக, வாசிப்பின் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை எதிரே தொடங்கியது. காமராஜா் வளைவு, சங்குப்பேட்டை, பாலக்கரை வழியாக சென்ற பேரணி நகராட்சி மைதானத்தில் நிறைவடைந்தது.

இந்நிகழ்வுகளில் பள்ளி முதல்வா் ஆா். அங்கயற்கன்னி, துணை முதல்வா் ஏ. அகஸ்டின், காவல் ஆய்வாளா் நித்யா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: