பெரம்பலூா் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி பலி

பெரம்பலூா் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி பலி


பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை மாலை மின்னல் பாய்ந்ததில் விவசாயி ஒருவா் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், எறையசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சொக்கையா மகன் வேலு (50). விவசாயி. இவா், ஆடு வளா்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை எறையசமுத்திரம் கிராமத்திலிருந்து அய்யலூா் செல்லும் சாலையில் ஆடு மேய்த்தபோது பலத்த இடியுடன் மழை பெய்த நிலையில் மின்னல் பாய்ந்து உயிரிழந்தாா். தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா் அவரது உடலை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: