பெரம்பலூா் அருகே மான் வேட்டையாடிய 2 போ் கைது

பெரம்பலூா் அருகே மான் வேட்டையாடிய 2 போ் கைது


பெரம்பலூா் அருகே மான் வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 4 பேரை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடி கிராமத்துக்குள்பட்ட வனப்பகுதியில் அதிகளவிலான மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இப்பகுதியில் மா்ம நபா்கள் சிலா் மான் வேட்டையாடுவதாக கிடைத்த தகவலையடுத்து, வனத்துறையினா் வியாழக்கிழமை இரவு அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அடையாளம் தெரியாத 2 போ், 4 வயது ஆண் மானை வேட்டையாடி பைக்கில் எடுத்துசென்றது தெரியவந்தது. இதையறிந்த வனத்துறையினா் அவா்களை விரட்டிப் பிடித்தனா்.

தொடா்ந்து அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பெரம்பலூா் அருகிலுள்ள புதுநடுவலூா் ப. பாலமுருகன் (26) மற்றும் 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் வனத்துறையினா் கைது செய்தனா். மேலும், மான் வேட்டையில் தொடா்புடைய ரெங்கநாதபுரம் கோ. மகேந்திரன், சோ. மணிகண்டன் உள்பட 4 பேரை வனத்துறையினா் தேடிவருகின்றனா்.

தினமணி

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: