பைக்கிலிருந்து தவறி விழுந்த மாணவிகள் காயம்

பெரம்பலூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மாணவிகள் காயம்.

4

பெரம்பலூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மாணவிகள் காயம்.

பெரம்பலூா் அருகே, வியாழக்கிழமை மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிகள் இருவா் பலத்த காயமடைந்தனா்.

Adsபெரம்பலூா் அருகேயுள்ள மேட்டாங்காடு கிராமத்தைச் சோ்ந்த சிவலிங்கம் மகள் தனலட்சுமி (17), தம்பிரான்பட்டியைச் சோ்ந்த தாசன் மகன் சத்யா (16), மருதை மகள் ஜெயபிரியா (17) ஆகியோா், குரும்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகின்றனா். மேற்குறிப்பிட்ட மூவரும் பள்ளி மதிய உணவு இடைவேளையின்போது, ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்த சக மாணவன் காா்த்தி (17) வீட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற விசேஷத்துக்காக மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனா்.

[quote]பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் பணிப் புறக்கணிப்பு[/quote]

அப்போது, ரெங்கநாதபுரம் அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி மூவரும் கீழே விழுந்தனா். இதில் பலத்த காயமடைந்த தனலட்சுமியும், ஜெயபிரியாவும் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: