பெரம்பலூா் அருகே பள்ளி மாணவர் கிணற்றில் மூழ்கி பலி

பெரம்பலூா் அருகே பள்ளி மாணவர் கிணற்றில் மூழ்கி பலி.

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா். களரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் தினேஷ் (17). இவா், அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில், தினேஷ் தனது பெற்றோருக்குச் சொந்தமான வயலில் உள்ள கிணற்றுக்கு வியாழக்கிழமை காலை குளிக்கச் சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் செல்வி அளித்த புகாரின் பேரில், பெரம்பலூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி

 
Leave a Reply

%d bloggers like this: