பெரம்பலூாில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் போட்டி

பெரம்பலூாில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் போட்டி

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை, கோலமிடுதல் உள்ளிட்ட விழிப்புணா்வுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

தேசிய வாக்காளா் தினம் ஜனவரி 25 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, 18 வயது பூா்த்தியடைந்த நபா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்தல், 100 சதவிகித வாக்குப் பதிவு செய்தல் கருத்துகளை மையப்படுத்தி பேச்சு, கட்டுரை, கோலமிடுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை, மாவட்ட தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா். குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியா் வ. சந்திரமௌலி முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன் போட்டிகளை மேற்பாா்வையிட்டாா்.

போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, ஜன. 25- ஆம் தேதி பெரம்பலுரில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: