பெரம்பலூர் மாவட்ட கோவில்களில் கார்த்திகை மகா தீபம்.
பெரம்பலூர் அருகே எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மகா தீபத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பிரம்மரிஷி மலை உச்சியில் நேற்று மாலை 6 மணி அளவில் பெரிய செம்பு கொப்பரையில் 1,008 மீட்டர் திரி, 300 கிலோ நெய், ஆயிரம் லிட்டர் எண்ணெய் மற்றும் 108 கிலோ கற்பூரத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது. விழாவை முன்னிட்டு, மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீகாகன்னை ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றது. சாதுக்களுக்கு வஸ்திரம், அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவையொட்டி மாதாஜிரோகிணி ராஜகுமார், இலங்கை ராதா மாதாஜி முன்னிலையில் இளம் தவயோகிகள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் சுவாமி ஆகியோர் கார்த்திகை மகாதீபத்திற்கு ஆரத்தி வழிபாடு செய்து பூஜையை நடத்தினர். விழாவில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மற்றும் அரசு அலுவலர்கள், பக்தர்கள், சாதுக்கள், சிவனடியார்கள், குரு கடாட்சம் மெய்யன்பர்கள் கலந்து கொண்டனர்.
Keyword: பெரம்பலூர் மாவட்ட செய்திகள், பெரம்பலூர் செய்திகள்
You must log in to post a comment.