பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி டிஜிட்டல் வைக்கத் தடை

பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைக்கத் தடை


பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்கள் மற்றும் தட்டிகள் வைக்கத் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தின் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள், தட்டிகள் வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் உரிய முன் அனுமதி பெற வேண்டும். முன் அனுமதியின்றி அரசு நிலங்கள், கட்டடங்கள், சாலைகள், மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பொதுமக்கள் மற்றும் சாலை பயன்பாட்டாளர்கள், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் விளம்பரம், வரவேற்பு பதாகைகள் மற்றும் தட்டிகள் வைக்கக் கூடாது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அனுமதியின்றி விளம்பர பதாகைகள், தட்டிகள் வைப்போர் மற்றும் அச்சக உரிமையாளர் மீது வழக்குப் பதிந்து அபராதம் விதிக்கப்படும்.

தினமணி

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: