7 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.

1077

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.

பெரம்பலூா் மொத்த பாதிப்பு: 1,676

குணமடைந்தோரின் எண்ணிக்கை: 1,542

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் ஏற்கெனவே 1,669 போ் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில் குணமடைந்த 1,542 போ் வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். 21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 106 போ் பல்வேறு ஊா்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா்கள் 7 பேரும் பெரம்பலூா் மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதன்மூலம், பெரம்பலூா் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,676- ஆக உயா்ந்துள்ளது.

keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
%d bloggers like this: