புதிய செய்தி :

பெரம்பலூர் மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறை

மகாவீர் ஜயந்தியை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மகாவீர் ஜயந்தி தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்களுக்கு வியாழக்கிழமை (மார்ச் 29) விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply