சமீபத்திய பதிவுகள்
Search

பெரம்பலூர் பிரம்ம புரீஸ்வரர் கோவில் மாசிமக பெருவிழா.

பெரம்பலூர் பிரம்ம புரீஸ்வரர் கோவில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பெரம்பலூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் மாசி மக பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் அனுக்கை, விக்னேஸ்வரபூஜை, வாஸ்துசாந்தி ஆகியவை நடைபெற்றது. நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி- அம்பாள் உற்சவர் சிலைகள் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் ஓத, சோடஷ பூஜைகளும், நெய்தீப, கற்பூரதீப மகா ஆராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி- அம்பாள் சிலைகள் கொடிமரம் முன்பாக பல்லக்கில் நிறுத்தி வைக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் வாசிக்க தினத்தந்தி..Leave a Reply

%d bloggers like this: