சமீபத்திய பதிவுகள்
Search

பெரம்பலூர் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரும்பாவூர் மக்கள் மனு

பெரம்பலூர் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரும்பாவூர் மக்கள் மனு

பெரம்பலூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை கேட்டு அரும்பாவூர் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார் கூட்டத்தில் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூரை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் சாந்தாவிடம் கொடுத்த மனுவில், அரும்பாவூர் பேரூராட்சியில் ஆதிதிராவிட இனமக்களாகிய நாங்கள் அதிகமாக வசித்து வருகிறோம். ஏழ்மையின் காரணமாக நாங்கள் ஒரு குடிசை வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருவதால் இரவு நேரத்தில் தூங்குவதற்கு இடமின்மையால், தெருக்களில் தூங்க வேண்டிய அவல நிலையில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதனால் பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை வழங்கினால் அதில், குடிசை போட்டு வாழலாம் என்ற நோக்கில் கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடமும், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரியிடமும் இருமுறை மனு கொடுத்துள்ளோம். ஆனால் அவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகள் காலதாமதம் செய்யாமல் அரும்பாவூரில் அரசுக்கு சொந்தமான ஏதாவது புன்செய் நிலத்தை கையகப்படுத்தி, வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். இனியும் மாவட்ட நிர்வாகம் வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறியிருந்தனர். மேலும் வாசிக்க தினத்தந்தி…Leave a Reply

%d bloggers like this: