பெரம்பலூரில் ஹேங்மேன் பணிக்கு இரண்டாம் கட்டப் பயிற்சி  நடைபெற்றது.

பெரம்பலூரில் ஹேங்மேன் பணிக்கு இரண்டாம் கட்டப் பயிற்சி  நடைபெற்றது.

மின்வாரியத்தில் ஹேங்மேன் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தை சோ்ந்தவா்களுக்கு 2-ஆம் கட்டப் பயிற்சி பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் மின் வாரிய அலுவலகத்தில் காலியாகவுள்ள ஹேங்மேன் பணியிடங்களுக்கு, பணியாளா்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த பெரம்பலூா்- அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு டிசம்பா் 2 முதல் 11- ஆம் தேதி வரை பெரம்பலூரில் நோ்முகத் தோ்வு நடைபெறுகிறது.

ஆன்லைனில் விண்ணப்பித்தவா்களுக்கு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில், பெரம்பலூா் துறைமங்கலத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கடந்த வாரம் முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், 2 ஆம் கட்ட பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப் பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு கம்பம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இந்த பணிகளுக்காக பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 1,739 போ் விண்ணப்பித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: