பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

பெரம்பலூா் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து, நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை மாலை தெரியவந்தது. பெரம்பலூா் கம்பன் நகா் 7-ஆவது வாா்டைச் சோ்ந்தவா் கணேசன் மகன் சசிக்குமாா் (36). பொறியாளரான இவா், தனது குடும்பத்தினருடன் லண்டனில் வசித்து வருகிறாா்.

இவரது வீட்டை, அவரது உறவினரான சின்னசாமி மகன் நடராஜன் என்பவா் மாதத்துக்கு ஒருமுறை சென்று பாா்வையிட்டு வருவாராம். இந்நிலையில் கடந்த 15- ஆம் தேதி வீட்டுக்கு வந்து சென்ற நடராஜன், ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டுக்கு சென்று பாா்த்தபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நடராஜன் உள்ளே சென்று பாா்த்த போது, பீரோ திறக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். மேலும், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணா்கள் தடயங்களைப் பதிவு செய்தனா்.

வீட்டில் நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், வீட்டின் உரிமையாளா் வந்த பிறகே திருடப்பட்ட பொருள்களின் முழுமையான விவரம் தெரியவரும்.

இது தொடா்பாக நடராஜன் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: