பெரம்பலூரில் விதிகளை மீறிய 14 வாகனங்களுக்கு அபராதம்

பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 14 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

போக்குவரத்து ஆணையர் உத்தரவின்பேரில், பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) ஜெயதேவ்ராஜ் தலைமையில், இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகச் செயலாக்க வட்டார போக்குவரத்து அலுவலர் பாட்டப்பசாமி, துணை போக்குவரத்து ஆணையர் அலுவலக செயலாக்க வட்டார போக்குவரத்து அலுவலர் கணேசன் ஆகியோர், பெரம்பலூர் மாவட்ட எல்லையில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் இயக்கப்படுகிறதா என வியாழக்கிழமை தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, அதி வேகமாகவும், சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி செல்லுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 14 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அதிக பொதுமக்களை ஏற்றிச் சென்ற 2 வாகன ஓட்டுநர்களின் உரிமத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ்ராஜ் . வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் செல்வராஜ், பெரியசாமி, பிரபாகரன், முகமதுமீரான் மற்றும் போலீஸார் ஆகியோர் உடனிருந்தனர்.
Leave a Reply

%d bloggers like this: