புதிய செய்தி :

பெரம்பலூரில் விடுமுறை நாட்களிலும் வரி வசூல் மையம் செயல்படும்

பெரம்பலூர் நகராட்சி வரி வசூல் மையம் விடுமுறை நாள்களிலும்(மார்ச் 29 முதல் 31 வரை) செயல்படும் என தெரிவித்துள்ளார் நகராட்சி ஆணையர் (பொ) பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, புதை சாக்கடை கட்டணம், வைப்புத்தொகை மற்றும் கடை வாடகை ஆகியவற்றை பொதுமக்கள் உடனடியாக செலுத்த வேண்டும்.

பொதுமக்களின் நலன்கருதி விடுமுறை நாள்களான வியாழக்கிழமை (மார்ச் 29) முதல் 31 ஆம் தேதி வரை பழைய மற்றும் புதிய நகராட்சி அலுவலகங்களில் நாள்தோறும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வரி வசூல் செய்யப்படும்.

எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தலாம்.

மேலும், கட்டணம் செலுத்தாவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்டவர்களின் சொத்துகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.
Leave a Reply