பெரம்பலூரில் மது குறித்து விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூரில் நேற்று  (திங்கள் கிழமை) மதுவினால் உண்டாகும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மது நாட்டுக்கும், வீட்டுக்கும் எவ்வாறு கேடுவிளைவிக்கிறது, இதனால் ஏற்படும் தனிமனித பாதிப்புகள் குறித்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, ரோவர் வளைவு வழியாக சென்று  நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறைவுபெற்றது.  இந்தப் பேரணியில் மதுவுக்கு எதிரான வாசங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்தபடி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

பல்வேறு கல்லூரிகளை சார்ந்த 700-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலந்துக் கொண்ட பேரணியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்களும் கலந்துக் கொண்டனர்.
Leave a Reply

%d bloggers like this: