புதிய செய்தி :

பெரம்பலூரில் பஸ் பயணியிடம் பணம் திருடிய 2 பெண்கள் பேர் கைது

பெரம்பலூரில் தனியார் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணியிடம் ரூ. 32 ஆயிரம் திருடிய சேலத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் 2 பேரைப் பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் அருகேயுள்ள பேரளி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி முருகேஸ்வரி. இவர், ரூ. 32 ஆயிரம் ரொக்கத்துடன் தனியார் பேருந்தில் பெரம்பலூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தார்.

பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பில் உள்ள நிறுத்தத்தில் இறங்கியபோது, முருகேஸ்வரி பையிலிருந்த பணப்பை திருடுபோயிருந்தது தெரியவந்தது. பின்னர், அங்கிருந்து ஆட்டோவில் பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலையத்துக்கு சென்றார். அப்போது, பேருந்தில் தன் அருகில் நின்றிருந்த 2 பெண்களைப் பிடித்தபோது, அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனர். இதையறிந்த சக பயணிகள் அந்தப் பெண்களை விரட்டிப் பிடித்து பெரம்பலூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணையில், சேலம் மாவட்ம், கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த நடராஜன் மனைவிகள் அனிதா (25), திவ்யா (20) என்பதும், அவர்கள் இருவரும் வழிப்பறி, திருட்டில் அடிக்கடி ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து அனிதா, திவ்யா ஆகியோரைக் கைது செய்தனர்.
Leave a Reply