பெரம்பலூரில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், அரசுப் பணியாளர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போட்டிகளை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஞான. சிவகுமார் தொடங்கி வைத்தார். இதில், 200 ஆண்களும், 150 பெண்களும் பங்கேற்றனர்.

ஆண்களுக்கான தடகளப் போட்டிகளில் 100 மீ., ஓட்டத்தில் என். அருள், 800 மீ., ஓட்டத்தில் எம். சரவணன், உயரம் தாண்டுதல் போட்டியில் பி. கதிரவன், நீளம் தாண்டுதல் போட்டியில் என். அருள், குண்டு எறிதல் போட்டியில் அ. யேசுபாலன் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

பெண்களுக்கான தடகளப் போட்டிகளில், 100 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகியவற்றில் கே. சுமதி, 200 மீ., ஓட்டத்தில் பா. தங்கரதி, 800 மீ., ஓட்டத்தில் கே.எஸ். விஜயா சாமுண்டீஸ்வரி, குண்டு எறிதல் போட்டியில் பி. தனவள்ளி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கையுந்துப் பந்து போட்டிகளில் கல்வித்துறையும், பெண்களுக்கான இறகுப்பந்து போட்டியில் கால்நடை பராமரிப்புத் துறை அணியினரும், ஆண்களுக்கான இறகுப்பந்து போட்டியில் கல்வித்துறை அணியினரும், ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் சுகாதாரத் துறையினரும், பெண்களுக்கான போட்டியில் கல்வித்துறையினரும் முதலிடம் பெற்றனர்.

ஆண்களுக்கான மேஜைப்பந்து ஒற்றையர் பிரிவில் ஆர்.சரவணன், இரட்டையர் பிரிவில் ஆர். சரவணன், பி.ரவி, ஆண்களுக்கான கால்பந்து போட்டியில் சுகாதாரத் துறை முதலிடம் பெற்றனர்.

தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பை, பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் துணை கண்காணிப்பாளர் ரவீந்திரன்.

நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. ராமசுப்பிரமணியராஜா, தடகளப் பயிற்றுநர் க. கோகிலா உள்ளிட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

source:dinamaniLeave a Reply

%d bloggers like this: