பெரம்பலூர் மக்களவை தொகுதியின் வாக்காளர்களில் பெண்களே அதிகம்.

பெரம்பலூர் மக்களவை தொகுதியின் வாக்காளர்களில் பெண்களே அதிகம்.


பெரம்பலூர் மக்களவை தொகுதியில் மொத்த வாக்காளர்களாக 13,91,011 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 34,025பேர் அதிகம்.

இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் தயார். மொத்த மக்கள் தொகையில் 74சதவீதம் பேர் வாக்காளர்களாக உள்ளனர். 6 சட்டமன்றத் தொகுதிகளில் 1,644 வாக்குச் சாவடிகள்.

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி, திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர் (தனி), முசிறி சட்டமன்ற தொகுதிகள், கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை சட்டமன்ற தொகுதி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 332 வாக்குச்சாவடிகள்உள்ளன. மொத்த மக்கள்தொகை 4,10,126 பேர் ஆகும். இதில் ஆண்கள் 1,41,746 பேர், பெண்கள் 1,47,969 பேர், இதர வாக்காளர்கள் 17 பேர் என மொத்தமாக வாக்காளர்கள் 2,89,732 உள்ளனர்.

துறையூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 268 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்த மக்கள்தொகை 2,83,822 பேராகும். இதில் ஆண்கள் 1,05,977 பேர், பெண்கள் 1,12,391 பேர், இதர வாக்காளர்கள் 7 பேர் என மொத்த வாக்காளர்கள் 2,18,375 பேர் உள்ளனர்.

குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 267 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்தமக்கள்தொகை 3,11,798 பேராகும். இதில் ஆண்கள் 1,06,346 பேர், பெண்கள் 1,10,584 பேர், இதர வாக்காளர்கள் 4 பேர் என மொத்தம் 2,16,934 வாக்காளர்கள் உள்ளனர்.

லால்குடி சட்டமன்ற தொகுதியில் 249 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்த மக்கள்தொகை 2,80,247 பேராகும். இதில் ஆண்கள் 1,02,347 பேர், பெண்கள் 1,08,000 பேர், இதர வாக்காளர் 12 பேர் என மொத்தமாக 2,10,359 வாக்காளர்கள் உள்ளனர்.

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி யில் 273 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்த மக்கள்தொகை 3,12,296 பேராகும். இதில் ஆண்கள் 1,12,631 பேர், பெண்கள் 1,19,055 பேர், இதர வாக்காளர்கள் 28 பேர் என மொத்தமாக 2,31,714 வாக்காளர்கள் உள்ளனர்.

முசிறி சட்டமன்ற தொகுதியில் 255 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்த மக்கள்தொகை 2,93,419 பேர் ஆகும். இதில் ஆண்கள் 1,09,405 பேர், பெண்கள் 1,14,478 பேர், இதர வாக்காளர்கள் 14 பேர் என மொத்தமாக 2,23,897 வாக்காளர்கள் உள்ளனர்.

இதன்படி பெரம்பலூர் மக்களவை தொகுதியில் மொத்தம் 1,644 வாக்குச்சாவடிகள் உள்ளன. 2019ம் ஆண்டு உத்தேச மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 18,91,708 பேர் ஆகும். இதில் ஆண்கள் 6,78,452 பேர், பெண்கள் 7,12,477 பேர், இதர வாக்காளர்கள் 82 பேர் என மொத்தமாக 13,91,011 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 34,025 பேர் அதிகமாகும்.

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் மொத்தமுள்ள மக்கள்தொகையில் 73.53 சதவீதம் பேர் அதாவது 74 சதவீதம் பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

Source: Dinakaran
Leave a Reply

%d bloggers like this: