பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து குன்னத்தில் விழிப்புணர்வு
பெரம்பலூர் மாவட்ட போலீசார் புன்னகையை தேடி என்ற திட்டத்தின் மூலம் குழந்தைகளை சந்தித்து அவர்களின் எதிர்காலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் உத்தரவின்பேரில் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் மேற்பார்வையில், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அசிம், சப்-இன்ஸ்பெக்டர் ஜான், ஏட்டு சுகன்யா மற்றும் புன்னகை தேடி குழுவினர் நேற்று முன்தினம் குன்னம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆதரவற்று சுற்றித்திரியும் குழந்தைகள் உள்ளார்களா? என்றும், கடைகள், ஓட்டல்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கட்டாயப்படுத்தப்பட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனரா? என்றும் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து கேடயம் திட்டம் குறித்து குன்னம் பஸ் நிறுத்தத்தில் பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி குழந்தை திருமணம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.