சமீபத்திய பதிவுகள்
Search

“பெட்டிக்கடை” யில் இயக்குனர் சமுத்திரக்கனி.

“பெட்டிக்கடை” யில் இயக்குனர் சமுத்திரக்கனி.

இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி, ‘பெட்டிக்கடை என்ற ஒரு படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘பெட்டிக்கடை. இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி நடித்துள்ளார். மேலும் படத்தில் வீரா, வர்ஷா பொல்லம்மா, சாந்தினி, சுந்தர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஒரு காலத்தில் பெட்டிக் கடைகள் இல்லாத கிராமங்களையும், நகரங்களையும் பார்க்க முடியாது. தற்போது சூப்பர் மார்க்கெட், ஆன்-லைன் வர்த்தகம் என்று ஆன பின், பெட்டிக்கடைகளின் நிலைமை ரொம்பவும் மோசமாகி வருகிறது. இதுதான் கதை. இதை அடிநாதமாக வைத்து, மூன்று மணி நேரத்துக்கு ஒரு கதை பண்ணி இருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன். இந்தப் படத்திற்கு மரியா மனோகர் இசையமைத்துள்ளார். படத்தை இயக்குனர் இசக்கி கார்வண்ணனே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

%d bloggers like this: