அரண்மனைகுறிச்சி தில்லை காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா.

அரண்மனைகுறிச்சி தில்லை காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா.

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரண்மனைகுறிச்சி கிராமத்தில் உள்ள தில்லை காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரண்மனைகுறிச்சி கிராமத்தில் உள்ள தில்லை காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் கரகம் மற்றும் பூத்தட்டுகளை திருமழபாடி கொள்ளிடக் கரையில் இருந்து பாதயாத்திரையாக கொண்டுவந்தனர்.

பின்னர் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பட்டு உடுத்தி சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுபகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Leave a Reply

%d bloggers like this: