புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு சவூதியில் அஞ்சலி

Hits: 0

புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு சவூதியில் அஞ்சலி

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான இந்திய வீரர்களுக்கு ஜித்தா இந்திய தூதரகத்தில் அஞ்சலி செலுத்தப் பட்டது.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலை உலக நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன.

இந்நிலையில் சவூதி இந்திய தூதரகத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது. ஞாயிறன்று இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஏராளமான இந்தியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு கன்சுல் ஜெனரல் நூர் ரஹ்மான் சேக் தலைமை தாங்கினார்.

Inneram.comLeave a Reply