‘புரெவி’ புயல் காரணமாக விடிய, விடிய மழை.

‘புரெவி’ புயல் காரணமாக விடிய, விடிய மழை.

427

‘புரெவி’ புயல் காரணமாக விடிய, விடிய மழை.

‘நிவர்’ புயல் காரணமாக ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் வங்க கடலில் உருவான ‘புரெவி’ புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் நேற்று முன்தினம் பகல் நேரத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அவ்வப்போது விட்டு, விட்டு லேசான மழையே பெய்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று பெய்ய தொடங்கிய மழை, நேற்று காலை வரை விடிய, விடிய இடைவிடாமல் பெய்தது.

பகல் நேரத்தில்…

மேலும் நேற்று பகல் நேரத்தில் அவ்வப்போது விட்டு, விட்டு காற்றுடன் கூடிய பலத்த மழையும், மற்ற நேரங்களில் மழை தூறிக்கொண்டும் இருந்தது. இதனால் சாலையில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. மேலும் கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்புகள் அகற்றப்படாததால் கழிவுநீருடன் மழைநீர் சேர்ந்து சாலையில் சென்றது. மழையின் காரணமாக ஏரிகள், குளங்கள், கண்மாய்களுக்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். பகல் நேரத்தில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தவாறு காட்சியளித்தது.

இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். மழை பெய்த போது சாலையில் நடந்து சென்றவர்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனையாமல் இருக்க மழை கோட் அணிந்தும், குடை பிடித்தபடியும் சென்றதை காண முடிந்தது. ஏற்கனவே நிவர் புயலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தது போல், புரெவி புயலுக்கும் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. மேலும் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.

நிவாரண முகாம்களில்தங்க வைப்பு

பெரம்பலூர் சங்குபேட்டையில் சாலையோரத்தில் ஒரு மரம் சாய்ந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக வந்த நெடுஞ்சாலைத்துறையினர் அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் திறந்த வெளி மற்றும் தாழ்வான பகுதிகளில் தங்கியிருந்த 11 குடும்பங்களை சேர்ந்த 19 பேர், மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால், 7 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் மற்றும் நேற்று பெய்த மழையால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இரவிலும் மழை தொடர்ந்து பெய்தது.

மழை அளவு விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பெரம்பலூர்-49, செட்டிகுளம்-29, பாடாலூர்-24, அகரம்சீகூர்-64, லெப்பைகுடிக்காடு-55, புது வேட்டக்குடி-38, எறையூர்-44, கிருஷ்ணாபுரம்-26, தழுதாழை-28, வி.களத்தூர்-18, வேப்பந்தட்டை-31.

இதேபோல் நேற்று காலை 6 மணி முதல் நேற்று மாலை 4 மணி வரை பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

பெரம்பலூர்-37, செட்டிகுளம்-28, பாடாலூர்-20, அகரம்சீகூர்-33, லெப்பைகுடிக்காடு-36, புது வேட்டக்குடி-18, எறையூர்-30, கிருஷ்ணாபுரம்-21, தழுதாழை-22 வி.களத்தூர்-20, வேப்பந்தட்டை-20.

keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
%d bloggers like this: