‘புரெவி‘ புயலால் குன்னம் தாலுகாவில் 25 வீடுகளின் சுவர்கள் இடிந்தன.

‘புரெவி‘ புயலால் குன்னம் தாலுகாவில் 25 வீடுகளின் சுவர்கள் இடிந்தன.

484

‘புரெவி‘ புயலால் குன்னம் தாலுகாவில் 25 வீடுகளின் சுவர்கள் இடிந்தன.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகாவில் ‘புரெவி‘ புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஓட்டு வீடு மற்றும் கூரை வீடுகளின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன.

இதில் துங்கபுரத்தில் பன்னீர்செல்வம், செல்வகுமார், பேரளியில் ராஜேந்திரன், செல்வராசு, பெருமத்தூரில் இளந்தென்றல், ராஜேஸ்வரி, வயலப்பாடியில் மாயவேல் பெரியசாமி, மழவராயநல்லூரில் பெரியம்மாள், உண்ணாமலை, கொளப்பாடி சுந்தரம், சிறுமத்தூர் அஞ்சலம், தனம், பாப்பா, சித்தளி ராமசாமி, மாரியாயி, வடக்கலூர் மூக்காயி, பரமசிவம், கண்ணகி, பென்னகோணம் கலியபெருமாள், வேலாயுதம், காந்திமதி, ஜோதி, கீழப்புலியூர் செல்லம்மாள், பரவாய் ஜெகதாம்பாள் ஆகிய 25 பேர் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன.

‘புரெவி‘ புயலால் சுவர் இடிந்து சேதமடைந்த வீடுகளை நேரில் பார்வையிட்ட குன்னம் தாசில்தார் சின்னதுரை, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, நிவாரணத்தொகை வழங்க ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். அவருடன் வருவாய் ஆய்வாளர்கள் வடக்கலூர் சக்திவேல், கீழப்புலியூர் மணிவாசகம், வரகூர் புஸ்பராணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
%d bloggers like this: