சவுதி அரேபியாவில் நாளை முதல் புனித ரமலான் ஆரம்பம்.

சவுதி அரேபியாவில் நாளை முதல் புனித ரமலான் ஆரம்பம்.


இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதமானது நாளை முதல் வளைகுடா நாடுகளில் துவங்க உள்ளது.

அமீரகத்தில் ரமலானையொட்டி தனியார் நிறுவனங்களின் வேலை நேரம் குறைப்பு!
அமீரகத்தில் ரமலான் மாதத்திற்கான பள்ளிகளின் நேரம் அறிவிப்பு.

சவுதி அரேபிய தமது அறிவிப்பில், நேற்று அதாவது சனிக்கிழமை பிறை ஏதும் தென்படவில்லை என்று அறிவித்தது. ஆகையால் இன்று (ஞாயிறு) சஃபான் மாதத்தின் கடைசி நாளாக இருக்கிறது. இதை தொடர்ந்து நாளை முதல் ரமலான் மாதம் துவங்க உள்ளது என்று அறிவித்துள்ளது. இன்று இரவு சஹர் செய்து நோன்பிருக்க துவக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதே போல் நாளை முதல் ரமலான் ஆரம்பமாக உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன், ஒமான் ஆகிய நாடுகளும் தெரிவித்துள்ளது.

ஆஸ்த்ரேலியா மற்றும் துருக்கியிலும் நாளை முதல் ரமலான் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாக்கிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், இலங்கைவில் நாளை மறுநாள் அதாவது செவ்வாய் கிழமை முதல் ரமலான் துவங்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
Leave a Reply