பெரம்பலூர் அருகே புது மணப்பெண் தீக்குளித்து சாவு.

பெரம்பலூர் அருகே புது மணப்பெண் தீக்குளித்து சாவு.

பெரம்பலூர் அருகே திருமணமான 25 நாள்களில் புது மணப்பெண் மண்ணெண்ணெய் ஊற்றி திங்கள்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர் அருகேயுள்ள வரகுபாடி கிராமம், காலனித் தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி மகள் புனிதவள்ளி (20). அதே பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன் (25). ஆட்டோ ஓட்டுநர். இருவருக்கும், கடந்த 25 நாள்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு தந்தை வீட்டுக்குச் சென்ற புனிதவள்ளி, மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக்கொண்டார். இதில், பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த மருவத்தூர் போலீஸார் அங்குசென்று, அவரது உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில், மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மேலும், திருமணமாகி 25 நாள்களே ஆவதால், வரதட்சினை காரணமா என வருவாய் கோட்டாட்சியர் என். விஸ்வநாதன் விசாரிக்கிறார்.

தினமணி



Leave a Reply

%d bloggers like this: