புதுச்சேரியில் திருமணமான 6 மாதத்தில் கணவனும் கர்ப்பிணி மனைவியும் மரணம்

புதுச்சேரியில் திருமணமான 6 மாதத்தில் கணவனும் கர்ப்பிணி மனைவியும் மரணம்


புதுச்சேரியில் திருமணமான 6 மாதங்களில் கணவனும், கர்ப்பிணி மனைவியும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை அடுத்த மதகடிப்பட்டு மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சிவா (32). இவர் அப்பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கும் சென்னை திருக்கழுகுன்றம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமிக்கும் (22) 18.4.2019 அன்று திருமணம் நடைபெற்றது. தற்போது விஜயலட்சுமி 4 மாதம் கர்ப்பமாக இருந்தார்.

இந்நிலையில் சிவாவின் வீட்டில் இருந்து இன்று புகை வந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையம், காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கணவன் மனைவி இருவரும் சடலங்களாகக் கிடந்தனர். மேலும் சமையல் எரிவாயு டியூப் திறக்கப்பட்டு, வீடு முழுவதும் சமையல் எரிவாயு பரவி இருந்தது.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், வீட்டில் தண்ணீரைப் பாய்ச்சி அடித்தனர். வீட்டில் இருந்த கட்டில் முழுவதுமாக எரிந்திருந்தது. கணவன்- மனைவி இருவருக்கும் லேசான காயம் இருந்தது. விஜயலட்சுமியின் கழுத்தில் பெரிய துப்பட்டா ஒன்று சுற்றி இருந்தது.

இந்தச் சம்பவம் குறித்து திருபுவனை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் விஜயலட்சுமி தூக்கில் தொங்கி இருக்கலாம். இதைப் பார்த்த சிவா மனைவி உடலைக் கீழே இறக்கி சமையல் எரிவாயுவைத் திறந்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். பிரேதப் பரிசோதனை முடிவுக்குப் பின்னரே காரணம் தெரியவரும் என்று போலீஸார் கூறுகின்றனர்.




Leave a Reply

%d bloggers like this: