புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படஉள்ளது!

Hits: 0

புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படஉள்ளது!


இந்திய ரிசர்வ் வங்கி, விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த புதிய ரூபாய் நோட்டு பச்சை-மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது ஆர்பிஐ. மேலும் ஆர்பிஐ, ‘இந்தப் புதிய ரூபாய் நோட்டில், எல்லோரா குகைகளின் படம் பதிக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் நம் நாட்டின் வளமான கலாசாரம் எடுத்துரைக்கப்படும்’ என்று அறிக்கை மூலம் கூறியுள்ளது. இந்த புதிய ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டாலும், புழக்கத்தில் இருக்கும் பழைய 20 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

1. இந்த புதிய ரூபாய் நோட்டுக்குப் பிரத்யேக வண்ணம் மற்றும் வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

2. 63 எம்.எம் x 129 எம்.எம் அளவை இந்த புதிய ரூபாய் நோட்டு பெற்றிருக்கிறது.

3. நோட்டின் முன்புறத்தின் இடது பக்கம், தேசப் பிதா மகாத்மா காந்தியின் படம் அச்சடிக்கப்பட்டுள்ளது.

4. ரூபாய் நோட்டின் பின்புறத்தில், எல்லோரா குகைகளின் படம் அச்சடிக்கப்பட்டிருக்கிறது.

5. நோட்டின் முன் புறத்தில் மேலும், ஆர்பிஐ, பாரத், இந்தியா, 20 என்கிற எழுத்துகள் இடம் பெற்றிருக்கின்றன.

6. முன்புறத்தின் வலது பக்கத்தில் அசோக் பில்லர் இருக்கிறது.

7. முன்புறத்தில் இடது மேலேயும், வலது கீழேயும் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த எண்கள் முதலில் சிறியதாக ஆரம்பித்து, தொடர்ந்து பெரிதாகிக் கொண்டே போகிறது.

8. பின்புறத்தில் எந்த ஆண்டு ரூபாய் நோட்டு பதிக்கப்பட்டிருக்கிறது என்ற விவரத்தை அறியலாம்.

9. ‘ஸ்வச் பாரத்’ முழக்கமும் ரூபாய் நோட்டின் பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

10. மொழிப் பட்டியலும் ரூபாய் நோட்டின் பின்புறத்திலேயே இருக்கிறது.

 

source: NDTV



Leave a Reply

%d bloggers like this: