புக்கிங்க் செய்தது ஒரு விமானம் ஏற்றிவிட்டது ஒரு விமானம்: ரன்வே சென்று திரும்பிய விமானம்.

புக்கிங்க் செய்தது ஒரு விமானம் ஏற்றிவிட்டது ஒரு விமானம்: ரன்வே சென்று திரும்பிய விமானம்.

விமானம் புக்கிங்க் செய்தது சுவீடன்-க்கு ஆனால் விமானம் எற்றியதோ ஜெர்மனிக்கு ஆமாம் இப்படி ஒரு சம்பம் வடக்கு கரோலினா-வில் நடந்துள்ளது.

வடக்கு கரோலினாவைச் சார்ந்த கிரிஸ்டர் பெர்க் என்பவர் தனது 14 வயது மகனைத் தனியாகச் சுவீடனுக்கு அனுப்பியுள்ளார். அவரது மகனை மற்றொரு நாட்டு விமானத்தில் மாற்றி ஏற்றிவிட்டதாகத் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தாத்தா பாட்டி வீட்டிற்குச் செல்ல தனது மகன் விரும்பியதால் யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பதிவு செய்து தனது 14 வயது மகனைத் தனியாக அனுப்பியுள்ளார் கிரிஸ்டர் பெர்க். அவருடைய மகனும் தனது தாத்தா பாட்டியைப் பார்க்கும் ஆர்வத்தில் கிளம்பியுள்ளான். விமானநிலைய ஊழியர்களும் விமானத்தில் ஏற்றிவிட்டுள்ளனர்.

தனது மகன் விமானத்தில் எரியச் சிறிது நேரத்தில் ஏதோ தவறாக இருப்பதாக உணர்ந்து எனக்கு மெசேஜ் செய்தான். அதில் தான் ஏரி இருக்கும் விமானத்தில் அனைவரும் ஜெர்மன் மொழியில் பேசுகிறார்கள் என்று. இதற்கிடையில் அவன் ஏரியுள்ள விமானம் பறப்பதற்குத் தயாராக விமான ஓடுதளத்திற்குச் சென்று விட்டது. உடனடியாக விமானப் பணிப்பெண் இடம் விவரம் கேட்டுள்ளான். அப்போதுதான் தெரிகிறது அந்த விமானம் சுவீடன் செல்லவில்லை ஜெர்மனிக்குச் செல்கிறதென்று. விமானப் பணிப்பெண் விமானிக்குத் தகவல் கொடுத்துள்ளார். விமானம் மாறி வந்துள்ளவரை இறக்கிவிட வேண்டி மீண்டும் விமான நிலையத்திற்கு வந்து எனது மகனை இறக்கிவிட்டுச் சென்றுள்ளது.

எனது மகன் போக வேண்டிய சுவீடன் விமானம் சென்றுவிட்டது. அடுத்து சுவீடன் சென்ற விமானத்தில் சென்றான் என்பதாகத் தெரிவித்தார் கிரிஸ்டர் பெர்க்.

இந்த தவற்றுக்காக யுனைட்டட் விமானச்சேவை நிறுவனம் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
Leave a Reply

%d bloggers like this: