பீட்சாவில் தோசை

பீட்சாவில் தோசை.

769

பீட்சாவில் தோசை.

தோசையில் பல விதமாக தோசை செய்து சாப்பிடுவாா்கள். அந்த வகையில் பீட்சாவில் தோசை செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

 • தேவையான பொருட்கள்
 • இட்லி அரிசி – 1 கப் (400 கிராம்)
 • உளுந்து – ¼ கப் (100 கிராம்
 • வெண்ணெய் – 2 டீஸ்பூன்
 • சீஸ் – தேவையான அளவு
 • பீன்ஸ் – 50 கிராம், கேரட் – 50 கிராம்
 • வெங்காயம் – 50 கிராம், தக்காளி – 50 கிராம்
 • கேப்ஸிகம் – 1
 • தக்காளி சாஸ் – தேவையானஅளவு
 • ஒலிவ் – தேவையான அளவு
 • மிளகு பொடி – 2 டீஸ்பூன்
 • சாட் மசாலா – 1 டீஸ்பூன்
 • பீட்சா தோசை (Pizza Dosa) செய்முறை
 • இட்லி அரிசி, உளுந்து தனித்தனியாக ஊற வைக்க வேண்டும்
 • இட்லி அரிசியை நன்றாக (வழுவழுப்பாக ஆக கூடாது) அரைக்கவும்
 • பிறகு உளுந்து பொங்கும் வரை நன்றாக அரைக்கவும், உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்
 • பீன்ஸ், வெங்காயம், தக்காளி, கேப்ஸிகம் இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி கலந்த வைத்துக் கொள்ளவும்.
 • தோசை கல் சூடான நிலையில் குறைந்த வெப்ப நிலையில் வைத்துக்கொள்ளவும்.
 • பிறகு தோசை மாவை மொந்தையாக ஊற்ற வேண்டும். தோசை மாவு மேலே பரவலாக நறுக்கி கலந்த வைத்துள்ள காய்கறியை போடவும்
 • அதில் சீஸை மேலாக போடவும்
 • அதன் மேல் சாட் மசாலா மற்றும் மிளகு பொடியையும் போடவும்.
 • பிறகு தக்காளி சாஸை போட்டு சுற்றி ஊற்ற வேண்டும்.
 • பிறகு ஒரு தட்டை மேலே போட்டு மூடவும்
 • சிறிது நேரம் கழித்து தட்டை எடுத்து பாத்தால் சீஸ் மெல்டாகி அழகாக இருக்கும்.
 • இப்பொழுது பீட்சா தோசை ரெடியாகி விட்டது. இனி கடைகளில் சென்று பீட்சா வாங்குவதை விட நம்ம வீட்டிலேயே பீட்சா செய்யும் போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

tag: kitchen tips

gulf news tamil
%d bloggers like this: