பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் பி.தயாளன் காலமானார்.

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் பி.தயாளன் காலமானார்.

பெரம்பலூர் மாவட்ட, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவருமான எழுத்தாளர் பி.தயாளன் அவர்கள், இன்று (27.07.2019) காலை உடல்நலக் குறைவு காரணமாக அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது கல்லாறு ஊடக குழுமத்திற்கு நல்ல பல அறிவுரைகள் தந்து வழிகாட்டியாக திகழ்ந்த ஆசான். எளிமையாக எல்லோர் மனதிலும் இடம்பிடித்த அன்னார் அவர்களின் பிரிவு செய்தி எமது கல்லாறு குழுமத்திற்கு பெரும் துயரத்தை தந்துள்ளது. அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் கல்லாறு ஊடக குழுமத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 04.30 மணியளவில் அரணாரை பிரிவுரோடு AVR நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

கல்லாறு ஊடக குழுமம்.Leave a Reply

%d bloggers like this: