தா.பழூர் அருகே பிளாஸ்டிக் கழிவுகளில் தீ விபத்து.

தா.பழூர் அருகே பிளாஸ்டிக் கழிவுகளில் தீ விபத்து.

தா.பழூரிலிருந்து சீனிவாசபுரம் செல்லும் சாலையில் உள்ள சுடுகாடு அருகே கொட்டப்பட்டு இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் நேற்று திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

அரியலூர் மாவட்டம், தா.பழூரிலிருந்து சீனிவாசபுரம் செல்லும் சாலையில் உள்ள சுடுகாடு அருகே கொட்டப்பட்டு இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் நேற்று திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

Leave a Reply

%d bloggers like this: