பிளஸ் 1 ரிசல்ட் மற்றும் அது தொடர்பான முக்கிய விபரங்கள்!

பிளஸ் 1 ரிசல்ட் மற்றும் அது தொடர்பான முக்கிய விபரங்கள்!


பிளஸ்1 தேர்வு முடிவு மற்றும் சான்றிதழ் பெறுவது தொடர்பான விவரங்களை அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

 • 1.பிளஸ்1 தேர்வு முடிவுகளை கீழுள்ள இணையதளங்களில் பார்த்து அறிந்து கொள்ளலாம். http://www.tnresults.nic.in/, http://www.dge1.tn.nic.in/,http://www.dge2.tn.nic.in/
 • அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இன்றி ரிசல்ட்டை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 • பள்ளியில் மாணவர்கள் அளித்த செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாக தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்படும்.
 • மதிப்பெண் பட்டியலை முதலில் இணைய தளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம். இது 14-ம்தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.
 • அச்சடிக்கப்பட்ட ஒரிஜினல் சான்றிதழ்கள் 14-ம்தேதி செவ்வாய்க் கிழமை மதியத்தில் இருந்து தாங்கள் படித்த பள்ளியில் இருந்து மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
 • PDF சான்றிதழ்களை 16-ம்தேதி பிற்பகல் முதல் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
 • பிளஸ்1-ல் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வை எழுதாதவர்களுக்கு ஜூன் 14 முதல் 21-ம்தேதி வரை சிறப்பு தேர்வுகள் நடைபெறுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும்.
 • மாணவர்கள் தங்களது மதிப்பெண்கள் குறைவதாக கருதினாலோ, அல்லது குறிப்பிட்ட பாடத்தில் தோல்வி அடைந்தாலோ அதற்கு மறு கூட்டலுக்கு விண்ணப்பம் செய்வார்கள். இதற்காக வரும் 10,11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் (Revalution) விண்ணப்பம் செய்யலாம்.
 • விடைத்தாள் நகலைப் பெற பாடம் ஒன்றுக்கு ரூ. 275 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • ரி-வேல்யூஷனை பொறுத்தளவில் உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ. 305-ம், மற்ற பாடங்களுக்கு ரூ. 205-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை +1 தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது பள்ளியிலேயே செலுத்தலாம்.

என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

தேர்ச்சி வீதத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாவட்டங்கள்:
1. ஈரோடு – 98.08%
2. திருப்பூர் – 97.90%
3. கோவை – 97.60%
தேர்ச்சி வீதத்தில் கடைசி 3 இடங்களை பிடித்த மாவட்டங்கள்:
1. வேலூர் – 89.29 %
2. கடலூர் – 89.76%
3. கிருஷ்ணகிரி – 90.93 %
பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்:
அரசுப்பள்ளிகள் – 90.6%
அரசு உதவி பெறும் பள்ளிகள் – 96.9%
மெட்ரிக் பள்ளிகள்  – 99.1%
இரு பாலர் பள்ளிகள் -95.1%
பெண்கள் பள்ளிகள் – 96.8%
ஆண்கள் பள்ளிகள் – 90.2%
பாடம் வாரியாக தேர்ச்சி விகிதம் :
 • மொழிப்பாடம் (முதன்மை மொழி) – 97.5%
 • ஆங்கிலம் – 97.6%
 • கணினி அறிவியல் 98.2%
 • வணிகவியல் 97.7%
 • கணக்குப் பதிவியல்97.7%
 • வரலாறு 95.1%
 • இயற்பியல் 94.6%
 • வேதியியல் 95.7%
 • உயிரியல் 97.1%
 • கணிதம் 96.9%
 • தாவிரவியல் 91.1%
 • விலங்கியல் 93.0%

127total visits,3visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: