பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் – கட்டிட உச்சியிலிருந்த நீச்சல்குள நீர் அருவி போல் கொட்டியது!

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் – கட்டிட உச்சியிலிருந்த நீச்சல்குள நீர் அருவி போல் கொட்டியது!


பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஏப்ரல் 22ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் மணிலாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள லுசோன் தீவை கடுமையாக தாக்கியது.  நிலநடுக்கத்தின் போது உயரமான கட்டிட உச்சியில் இருக்கும் நீச்சல்குளத்தின் நீர் கொட்டும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நில நடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

An earthquake emptying a rooftop swimming pool in Manila today. pic.twitter.com/kBeGEdmClx

— Space Explorer Mike (@MichaelGalanin) April 22, 2019

கட்டடத்தின் உச்சியில் இருந்து இயற்கையின் அழகை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்ட  நீச்சல் குளம் இயற்கையின் சீற்றத்தை சற்று கூட தாங்க முடியாமல் சீர் குழைந்து போனது.
Leave a Reply

%d bloggers like this: