தூக்கம் இல்லைன்னா நம் வாழ்வில் துக்கம்தான்.

தூக்கம் இல்லைன்னா நம் வாழ்வில் துக்கம்தான்.

வாழ்க்கையில் நாம் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று தூக்கமின்மை. போதுமான அளவு தூக்கம் உடல் சீராக இயங்க உதவுகிறது. செயற்கை ஒளியின் காரணமாக நம்முடைய இயற்கையான தூக்கத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெரும்பலானோர் இரவில் போதுமான தூக்கத்தைப் பெறுவதில்லை.

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

ஒருவரின் வாழ்நாளில் வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு அளவில் தூக்கம் தேவைப்படும். குழந்தைகள் ஒரு நாளில் 14 மணிநேரம் வரை தூங்க வேண்டும். நடுத்தர வயதினருக்குச் சுமார் 7 லிருந்து 9 மணிநேரம் தூக்கம் தேவைப்படுகிறது. 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு சராசரியாக 7 மணிநேர தூக்கம் போதும்.

தூக்கமின்மையினால் பாதிப்பு உண்டா?

  • போதுமான அளவு தூக்கம் கிடைக்காததால் அன்றைய நாளைத் தூக்கக்கலக்கத்துடன் கழிப்பது மட்டுமல்ல, நமது மனநலமும் பாதிக்கப்படுகிறது.
  • நமக்கு வலியை உணரும் சக்தியை அதிகரிப்பதுடன் அறிவாற்றலைப் பாதிக்கிறது. முடிவெடுக்கும் ஆற்றல், திட்டமிடும் ஆற்றல், நினைவாற்றல், கவனம் ஆகியவைத் தூக்கம் இல்லாத்தால் பாதிக்கப்படுகிறது.
  • போதுமான தூக்கமில்லாததால் உடலுக்குத் தேவையான சுரப்பிகளும் ஒழுங்காகச் சுரப்பதில்லை.
  • ஒரு நாளில் 5 மணிநேரத்துக்கும் குறைவாகத் தூங்குவோருக்கு இதய நோய் வரும் அபாயம் மூன்று மடங்கு வரை அதிகரிக்கிறது.

பிரச்னையைத் தீர்க்கும் வழிகள்:

  • தூங்குவதற்குமுன் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவும்.
  • படுக்கை அறையில் மின் பொருள்கள் வைத்திருப்பதைத் தவிர்க்கவும்.
  • தினமும் ஒரே நேரத்தில் தூங்குவதையும் எழுவதையும் பழக்கமாகக் கொள்ளுங்கள்.
  • எழுந்தவுடன் சுமார் 30 நிமிடம் சூரிய வெளிச்சத்தைப் பெறவும்.
  • தூக்கம் வரும் போதும் மட்டும் படுக்கச் செல்லுங்கள். இயல்பாக வரும் தூக்கத்திற்கு ஏற்ப தூக்க நேரத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.

45total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: