233499

பெரம்பலூர் ஆட்சியரகத்தில் பிச்சை எடுத்து போராடிய தம்பதி

பெரம்பலூர் ஆட்சியரகத்தில் பிச்சை எடுத்து போராடிய தம்பதி


வீட்டை விட்டு விரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோரிக்கை அட்டையை கைகளில் ஏந்தியவாறு கணவன், மனைவி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிகாடு காயிதே மில்லத் நகரைச் சேர்ந்தவர் லைலா (25). இவரது கணவர் அபுதாஹிர். லைலா தனது மாமனார் குத்புதீன் குடும்பத்தினருடன் லப்பைக்குடிகாட்டில் வசித்து வருகிறாராம்.

இந்நிலையில், மாமனார் மற்றும் நாத்தனார்கள் தாஹிரா பானு, ஜீனத் யாஸ்மின் ஆகியோர் தங்களை துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு, வரதட்சிணை கேட்டு துன்புறுத்துகின்றனராம்.

இது தொடர்பாக மங்கலமேடு காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த லைலா- அபுதாஹிர் ஆகியோர், தங்களை வீட்டைவிட்டு வெளியேற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். பின்னர், போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி ஆட்சியரிடம் அனுப்பினர்.

கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த தம்பதியினர், இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க தவறினால் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: