பாடாலூர் பகுதியில் மின்சாரம் தடைபட்டால் பிஎஸ்என்எல் சிக்னலுக்கும் தடை.

பாடாலூர் பகுதியில் மின்சாரம் தடைபட்டால் பிஎஸ்என்எல் சிக்னலுக்கும் தடை.


ஆலத்தூர் தாலுகா பாடாலூர் பகுதியில் மின்சாரம் தடைப்படும் நேரத்தில் பிஎஸ்என்எல் சிக்னல் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.முதன்முதலாக செல்போன் பயன்பாடு வந்தபோது அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்டிருந்த பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது அதன் சேவை குறைபாடு காரணமாக வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது என வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஆத்தூர் தாலுகாா பாடாலூர் பகுதியில் பிஎஸ்என்எல் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கோபுரத்தின் அருகில் மின்சாரம் தடைப்பட்டால் செயல்படும் வகையில் பேட்டரி மற்றும் ஜெனரேட்டர்கள் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த சில மாதங்களாக பேட்டரி முற்றிலும் செயலிழந்த நிலையில் மின்சாரம் தடைபட்டவுடன் ஜெனரேட்டர்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் பாடாலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தொடர்பு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்து வரும் நிலையில் இதுபோல் பிஎஸ்என்எல் சிக்னல் கிடைக்காமல் பல பேர் அவதிப்பட்டு வருவதால் அவர்களும் தனியார் செல்போன் இணைப்புக்கு மாறும் வாய்ப்புள்ளது.

எனவே பாடாலூர் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் செல்போன் கோபுர பகுதியில் ஜெனரேட்டர் மின்சாரம் தடைபட்டவுடன் செயல்படும் வகையில் அமைத்து எந்நேரமும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாடிக்கையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினகரன்

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: