பாலியல் குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க விசிக வலியுறுத்தல்.

பாலியல் குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க விசிக வலியுறுத்தல்.

பொள்ளாச்சி பகுதியில் பெண்களை சீரழித்த பாலியல் குற்றவாளிகள் மீது, பாரபட்சமின்றி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம், துறைமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் சி. தமிழ்மாணிக்கம் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் அ.க. தமிழாதன், செல்லப்பன், மன்னர்மன்னன், கலையரசன், கிருஷ்ணகுமார், ஸ்டாலின், உதயகுமார், ரத்தினவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செய்தி:
ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் கலைப்போட்டிகள்

மாநில நிர்வாகிகள் வீர. செங்கோலன், ராசித் அலி, கா.அ. தமிழ்குமரன், அண்ணாதுரை ஆகியோர் கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகள், மக்களவை தேர்தல் பணிகள் குறித்து விளக்கி பேசினர்.   கூட்டத்தில், பொள்ளாச்சி பகுதியில் பெண்களை சீரழித்த பாலியல் குற்றவாளிகள் மீது, தமிழக அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிதம்பரம் மக்களவை தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடும் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற கட்சித் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும். கட்சித் தலைவரின் முடிவுக்கு கட்டுப்பட்டு வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெரம்பலூர் ஒன்றியச் செயலர் சி. பாஸ்கர் வரவேற்றார். நகரச் செயலர் தங்க. சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

தினமணிLeave a Reply

%d bloggers like this: