கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முகேஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: .

பெரம்பலூர் மாவட்டம், கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2019- 2020 ஆம் கல்வியாண்டின் நேரடி இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு பட்டய சேர்க்கையில் நிரப்பப்படாத மீதமுள்ள காலியிடங்களை நிரப்பிட தொழில் நுட்பக் கல்வி இயக்கத்திலிருந்து அனுமதி கிடைத்துள்ளது. அதனடிப்படையில், நேரடி இரண்டாமாண்டு பட்டய சேர்க்கை ஜூலை 12 ஆம் தேதி வரையிலும், முதலாமாண்டு பட்டய சேர்க்கை 19 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

விருப்பமுள்ள மாணவர்கள் நேரடியாக கல்லூரிக்குவந்து விண்ணப்பித்து சேர்க்கையை பெறலாம். அரசின் நலத் திட்டங்கள் அனைத்தையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04328-243200.

தினமணி


மேலும் மாவட்ட செய்திகள் வாசிக்க – பெரம்பலூர் மாவட்ட செய்திகள்


Leave a Reply

%d bloggers like this: