பாட்டா கம்பெனிக்கே டாட்டா காட்டிய சண்டிகர் தினெஷ்.

பாட்டா கம்பெனிக்கே டாட்டா காட்டிய சண்டிகர் தினெஷ்.


கடைக்கு வந்த வாடிக்கையாளர்களரிடம் வாங்கிய காலணிகளை முழுமையாக பேக் செய்து, எடுத்துச் செல்ல வசதியாக கொடுக்கும் காகித பைகளுக்கு நபருக்கு 3 ரூபாய் என வசூல் செய்து வந்திருக்கிறது  Bata நிறுவனம். அதும் அதிலும் தமது Bata-வின் பிராண்ட் தெளிவாக அச்சிடப்பட்டிருக்கின்றது. அதாவது நம்ம காசிலேயே தனக்கான விளம்பரச் செலவுகளையும் சரி கட்டிக் கொண்டு தங்கள் Bata பிராண்டை வளர்த்திருக்கிறார்கள்.

இதைப் பார்த்து அதை எதிர்த்து தனி நபர் ஒருவர் சண்டிகர் நுகர்வோர் நீதிமன்றத்தில் கேஸ் பதிவு செய்தார்.  அதில் வாதாடி நான்காயிரம் ரூபாய் நஷ்ட ஈடாய் தனக்கும், ஐந்தாயிரம் ரூபாய் நுகர்வோர் சட்ட உதவிக் கணக்கிலும் Bata நிறுவனத்தை டெபாசிட் செய்ய வைத்து விட்டார்.

சண்டிகரைச் சேர்ந்தவர் தினேஷ் பிரசாத் ராதுரி. கடந்த பிப்ரவரி 05, 2019 அன்று செக்டார் 22டி பகுதியில் உள்ள Bata-வின் அதிகார பூர்வ அவுட் லெட்டில் ஒரு ஜோடி காலனிகளை வாங்கி இருக்கிறார். காலணியின் விலை 399 ரூபாய் தான். ஆனால் 3 ரூபாய் கூடுதலாக பில்லில் காகிதப் பைகளுக்காக சேர்த்து, வசூலித்திருக்கிறார்கள். எவ்வளவோ பேசிப் பார்த்தும் காகித பைக்கான கட்டணத்தை திரும்பக் கொடுக்கவில்லை.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண தினேஷ் சந்திகர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் “Bata நிறுவனம் எங்களிடமே காகித பைகளுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு, அவர்கள் Bata நிறுவனத்தின் பெயரைம் பதித்து பிராண்டிங் செய்து கொள்கிறார்கள். இது ஏற்புடையது அல்ல” என வாதாடி இருக்கிறார்கள்.

எனவே Bata நிறுவனம் என்னிடம் வாங்கிய 3 ரூபாய் உடன், குறையுடன் செய்த சேவைகளுக்கு ஒரு நல்ல நஷ்ட ஈட்டுத் தொகையையும் கொடுக்க வேண்டும் என வாதாடினார். இதற்கு Bata நிறுவனம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து. ஆனால் நீதிமன்றம் மசிவதாகத் தெரியவில்லை. ஆகையால் தீர்ப்பு Bata நிறுவனத்துக்கு எதிராக வந்திருக்கிறது.

ஒரு நிறுவனத்தின் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக காகிதப் பைகளையோ அல்லது பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையான வசதிகளை அவர்கள் தான் செய்துக் கொடுக்க வேண்டும். இந்தியாவில் அப்படித் தான் செய்து கொடுக்கிறார்கள். அந்த விஷயத்தில் Bata தவறி இருக்கிறது. எனவே இதை ஒரு சேவை குறைபாடாகவே பார்க்கிறது இந்த நுகர்வோர் நீதிமன்றம்.

எனவே 1,000 காகித பைகளுக்கான பணத்தை (1000*3 = 3,000 ரூபாய்) தினேஷுக்கு நஷ்ட ஈடாகக் கொடுக்கச் சொல்லி இருக்கிறது. அதோடு தினேஷின் வழக்குச் செலவுகளுக்கு 1,000 ரூபாயையும் கொடுக்கச் சொல்லி இருக்கிறது. இது போக நுகர்வோர் நீதிமன்றத்தில் 5000 ரூபாயையும் மாநில நுகர்வோர் குறை தீர்ப்பு மையத்தின் சட்ட உதவிக் கணக்கில் டெபாசிட் செய்யுமாறும் தீர்பளித்திருக்கிறது.

199total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: