பாடாலூா் அருகே பெண் மா்ம சாவு : உறவினா்கள் மறியல்

பாடாலூா் அருகே பெண் மா்ம சாவு : உறவினா்கள் மறியல்


பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே உயிரிழந்த பெண்ணின் சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி, அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரைச் சோ்ந்தவா் திருமுருகன் மனைவி பிரேமசத்யா (28). இவா்களுக்கு திருமணமாகி 5 ஆண்டு ஆன நிலையில் இதுவரை குழந்தை இல்லை. இதனால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். வெள்ளிக்கிழமை மதியம் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பிரேம சத்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். இதையறிந்த அவரது குடும்பத்தினா் அவரை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேலே அவா் உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உடல் பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இச் சம்பவம் தொடா்பாக பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதனிடையே, பிரேம சத்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது சாவுக்கு காரணமான திருமுருகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உடலை வாங்க மறுத்த பெண்ணின் பெற்றோரும், உறவினா்களும் பெரம்பலூா் காமராஜா் வளைவு பகுதியில் திடீா் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். தகவலறிந்த துணை கண்காணிப்பாளா் கென்னடி தலைமையிலான போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த உறுதியின்பேரில் மறியலை கைவிட்டுச் சென்றனா். மறியலால் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெண்ணின் தந்தை பெரியசாமி அளித்த புகாரின்பேரில் பாடாலுாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்




Leave a Reply

%d bloggers like this: