பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள பைக் திருட்டு!

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள பைக் திருட்டு!

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ஊட்டத்தூரை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் அறிவழகன் (37). இவர், வெள்ளிக்கிழமை இரவு பாடாலூர்- ஊட்டத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திச் சென்றராம். நீண்ட நேரத்துக்குப் பிறகு வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அறிவழகன் அளித்த புகாரின்பேரில், பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: