பஹ்ரைன் மனாமாவில் 150 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்.

பஹ்ரைன் மனாமாவில் 150 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்.

மனாமா சென்ட்ரல் சந்தையில் இருந்து 150 கிலோகிராம் கெட்டுப்போன மீன்களை கடல்சார் கண்காணிப்புத் துறையின் சிறப்பு குழு நேற்று கைப்பற்றியது. தரமற்ற மீன்கள் சந்தைகளில் விற்கப்படுவதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்ட்ரல் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 150 கிலோ கெட்டுப்போன மீன்கள் கைப்பற்றப்பட்டதாக கடல்சார் கண்காணிப்பு துறையின் சிறப்பு குழு தெரிவித்துள்ளது.

நுகர்வோர்கள் மீன் வாங்குவதற்கு முன்பு அதன் தரம் குறித்து விழிப்புனர்வுடன் இருக்குமாறு கடல்சார் கண்காணிப்பு துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையில், மனாமா சென்ட்ரல் சந்தையில் உள்ள மீன் சந்தையில் மறுசீரமைப்பு பணிகளில் கிட்டத்தட்ட 40 சதவீதம் நகராட்சியால் முடிக்கப்பட்டுள்ளது. இதை நகராட்சி இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார். “இந்த உணவு சந்தையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மறுசீரமைப்பு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

வளைகுடா செய்திகளுக்கு www.gcctamilnews.com

 
Leave a Reply

%d bloggers like this: