பிளாஸ்டிக் பை

பஹ்ரைனில் வரும் ஜுலை முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை.

பஹ்ரைனில் வரும் ஜுலை முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை.

பல நாடுகள் பிளாஸ்டிக் பொருள் உபயோகங்களை குறைத்தும், நிறுத்தியும் வருகின்றன. அந்த வரிசையில் வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைனும் தமது நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.

அடுத்த மாதம் முதல் பிளாஸ்டிக் தடைகளுக்கான ஒழுங்கு முறை சட்ட வடிவத்துடன் அமல் படுத்தப்படும் என்று பஹ்ரைன் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆரம்பமாக ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கினை தடை செய்து முறைப்படுத்தப்படும். பிறகு மறு சுழற்சிக்கு பயன்படும் மற்றும் மக்கும், மக்காத பிளாஸ்டிக்கினை வகைப்படுத்தி படிப்படியாக பயன் பாட்டை குறைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பஹ்ரைன் செய்தி நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்தது.

குறிப்பாக பிளாஸ்டிக்கானது கடல் மாசுபாட்டை அதிகரிக்கும் ஒரு முக்கிய காரணியாக உள்ளதும் பிளாஸ்டிக் தடைக்கு காரணமாக இருக்கிறது. சுற்றுச் சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த தன்பங்கிற்கு பஹ்ரைனும் தயாராகிவிட்டது என்றே சொல்லலாம்.
Leave a Reply

%d bloggers like this: