பஹ்ரைனில் ஈத் பெருநாள் விடுமுறை அறிவிப்பு!

பஹ்ரைனில் ஈத் பெருநாள் விடுமுறை அறிவிப்பு!

மே மாதம் 6-ம் தேதி முதல் புனித ரமலான் மாதம் துவங்கியதால் வளைகுடா நாடுகளில் நோன்பு வைத்தனர். அரபி மாதங்களில் ரமலான் மாதம் முடிந்து சவ்வால் துவங்க உள்ளது. அரபி மாதத்தில் சவ்வால் பிறை 1 அன்று ஈதுல் பித்ர் எனும் ரமலான் பெருநாள் கொண்டாடப்படும். சவ்வால் முதல் பிறையானது வரும் 4 அல்லது 5-ம் தேதி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையொட்டி பஹ்ரைன் நாட்டின் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா அவர்கள் ஈதுல் பித்ர் விடுமுறைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரதமர் அவர்களின் சுற்றறிக்கையில் ஈத் பெருநாள் அதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை என அறிவித்துள்ளார். வாரவிடுமுறையும் இந்த ஈதுல் பித்ர் விடுமுறையில் வரும் பட்சத்தில், அந்த விடுமுறை மற்றொரு நாளுக்கு விடுமுறையாக ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் அரசு துறை அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் இந்து மூன்று தினங்களுக்கு இயங்காது. இதனடிப்படையில் 4-ம் தேதி ஈதுல் பித்ராக இருக்கும் பட்சத்தில் 4-ம் தேதியுடன் 5 மற்றும் 6-ம் தேதி பஹ்ரைனில் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

%d bloggers like this: