ஆலத்தூர் அருகே பஸ்-லாரி மோதிய விபத்தில் 16 பேர் படுகாயம்.
ஆலத்தூர் அருகே தனியார் பஸ்- லாரி மோதிக்கொண்டதில் பயணிகள் உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
பஸ்- லாரி மோதல்
பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தத்தில் இருந்து நேற்று மதியம் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு தனியார் பஸ், ெபரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி கிராமம் காரை பிரிவு சாலையில் இருந்து தெரணி செல்லும் சாலையில் வந்தபோது, எதிரே டிப்பர் லாரி வந்தது. அப்போது தனியார் பஸ்சும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பஸ்சின் முன்பகுதியும், லாரியின் முன்பகுதியும் சேதமடைந்தன.
16 பேர் படுகாயம்
மேலும் பஸ்சில் பயணித்த 15 பயணிகள் படுகாயமடைந்தனர். டிப்பர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் இரூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன்(வயது 40) பலத்த காயம் காயமடைந்தார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை, அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must log in to post a comment.