பெரம்பலூர் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

பெரம்பலூர் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு


பெரம்பலூர் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்ற மர்ம நபரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் அருகேயுள்ள நொச்சியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி நைனாம்மாள் (55). கூலித்தொழிலாளி. இவர், திங்கள்கிழமை இரவு தனது வீட்டின் எதிரே கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தாராம். அப்போது நள்ளிரவில் அங்கு சென்ற மர்ம நபர், நைனாம்மாள் அணிந்திருந்த 6 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பித்து ஓடிவிட்டாராம்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: